கொரோனா பீதியால் மக்கள் சுயமுடக்கம்

அம்பாறை மாவட்டத்தில், தொடரும் கொரோனா பீதியால் பொதுமக்கள் சுயமாகவே பொதுப் போக்குவரத்தை குறைத்து வருகிறனர். வீதிகளில் வாகனப் போக்குவரத்து குறைந்து வருகின்றது. பஸ்களில் ஓரிருவரையே காணமுடிகின்றது. அண்மைக்காலமாக ,அம்பாறை மாவட்டத்தில் கொரோனாத் தொற்று வேகமாக பரவிவருகிறது.தினம்தினம் தொற்றாளர்களின் எண்ணிக்கை மோசமாக அதிகரித்து வருகிறது. மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கல்முனைப் பிராந்தியத்தைவிட அம்பாறைப் பிராந்திய நிலைமை நாளுக்கு நாள் படுமோசமாக மாறிவருகிறது.நேற்று முன்தினம் இடம்பெற்ற டிசிசி கூட்டத்திலும் இதுவிடயம் பேசப்பட்டது.

பெரும்பாலானவர்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் சுயமுடக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவசியமாக வெளியே சென்றாலும் மறுகணம் வீடுதிரும்பி விடுகிறார்கள்.

காரைதீவு குறூப் நிருபர்

 
Thu, 08/19/2021 - 18:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை