தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 50,000 பேருக்கு வழக்கு

இது வரை 53,942 பேர் சட்டமீறல்கள்

ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53, 942 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு நேற்று காலை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவ்வாறே இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 50, 000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thu, 08/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை