பாலியல் குற்றச்சாட்டு: நியூயோர்க் நகர மேயர் குவோமோ இராஜினாமா

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் அண்ட்ரூ குவோமோ பதவி விலகியுள்ளார்.

அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, விசாரணை நடைபெற்றது. அதில் அவர், 11 பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரியவந்தது.

சுயேச்சைப் புலனாய்வுக் குழு ஒன்று, ஐந்து மாதம் அவர் மீதான புகார்கள் குறித்து நடத்திய விசாரணையின் முடிவில், அமெரிக்கச் சட்டங்களை மீறிய செயல்களில் அவர் ஈடுபட்டதாக அறிவித்தது.

அதனையடுத்து, அவர் பதவி விலக சட்ட ரீதியான நெருக்குதல் ஏற்பட்டது. ஜனாதிபதி ஜோ பைடனும் மற்றவர்களும் அவரைப் பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து குவோமோ, கடந்த செவ்வாய்க்கிழமை பதவி விலகினார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேரடி உரையில், குவோமோ, தாம் எந்தவிதமான தகாத செயலையும் செய்யவில்லை என்று சொன்னார். இருப்பினும், பெண்களின் மனத்தைப் புண்படுத்தியதற்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

பெண்களுடன் நகைச்சுவையாகவோ, அன்பாகவோ பழக முயன்றதை, அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டதாக அவர் சொன்னார். தொடர்ந்து ஆளுநராகப் பணிபுரிவதும், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் போராடுவதும் கடினமாக இருக்கும் என்பதால் தாம் பதவி விலகுவதாக அவர் தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த குவோமோ, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதிவாய்ந்த வேட்பாளராகக் கருதப்பட்டவர்.  

 

Thu, 08/12/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை