வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் திரவ மருத்துவ ஒட்சிசன் இறக்குமதி

கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான திரவ மருத்துவ ஒட்சிசன் 300,000 லீற்றர்களை வாராந்தம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தீவிர நிலைமையிலுள்ள கொவிட்-19 நோயாளர்களுக்கு திரவ மருத்துவ ஒட்சிசன் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் 120,000 லீற்றர் ஒட்சிசனை மாதாந்தம் இறக்குமதி செய்வதற்கு 2021 மே மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

தற்போது பரவிவரும் திரிபடைந்த வைரஸ் காரணமாக ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், போதுமானளவு ஒட்சிசனை நாட்டில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு இயலுமான வகையில் தற்போது மாதாந்தம் இறக்குமதி செய்யப்படும் 120,000 லீற்றர்களுக்குப் பதிலாக வாராந்தம் 300,000 லீற்றர் ஒட்சிசனை இறக்குமதி செய்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Wed, 08/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை