வருமானத்தில் அரைவாசியை கொவிட் நிதியத்துக்கு வழங்க முன்வர அழைப்பு

தேவையான சந்தர்ப்பம் என அமைச்சர் வாசுதேவ தெரிவிப்பு

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமல்லாமல் நாட்டில் வசதி வாய்ப்புள்ள அனைவரும் தமது வருமானத்தில் அரைவாசியை கொவிட்19 நிதியத்துக்கு வழங்குவது இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பெறுமதியானதென்பதால் அதற்காக நடவடிக்கையை எடுக்குமாறு நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கேட்டுக் கொண்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மாதாந்த சம்பளத்தின் அரைவாசியை கொவிட்19 நிதியத்துக்கு வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்;

பணமில்லாத மக்கள் பிரதிநிதிகளிடம் நாம் இதனை கோரிக்கை விடுப்பதில்லை. எனினும் வருமானம் ஈட்டுகின்றன சகல மக்கள் பிரதிநிதிகளும் இந்த சந்தர்ப்பத்தில் தமது சம்பளத்தில் அரைவாசியை வழங்குவதற்கு முன் வரவேண்டும்.

அதே போன்று எமது நாட்டில் வசிக்கும் மற்றும் வெளிநாட்டு சொத்துக்களை வைத்துள்ள ஏனையவர்களும் தாம் உழைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை இந்த சந்தர்ப்பத்தில் அற்பணிப்பு செய்வது மிகவும் முக்கியமானது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மாத்திரமல்லாமல் அனைத்து வர்த்தகர்களுக்கும் இது பொருந்துமென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டார்.

 

Wed, 08/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை