ஆப்கானிஸ்தானுடனான எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள சீனா

ஆப்கானிஸ்தானுடனான எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள சீனா-China Tighten it's Border Near Afghanistan

காபூல் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததைத் தொடர்ந்து எழுந்துள்ள கொந்தளிப்பு நிலையை அடுத்து சீனா பயங்கரவாத அச்றுத்தலைத் தவிர்ப்பதற்காக  ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஆயுதக் குழுவினால்  கைப்பற்றப்பட்டுள்ளதால் உருவாகியுள்ள உறுதியற்ற நிலை அந்நாட்டை வடக்கில் எல்லையாகக் கொண்ட  தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மாத்திரமல்லாமல் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளான பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா, இந்தியா, துருக்கி  போன்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையலாம் என்று சீன அரசாங்கம் கவலை தெரித்துள்ளது.  இதேவேளை பயங்கரவாதத்திற்கு எதிரான பயிற்சியை சீனா தஜிகிஸ்தானுடன் ஆரம்பித்துள்ளது.

தலிபான்கள் ஆப்கானிதானைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து எழுந்துள்ள நிலையால் ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் சூழலில் தஜிகிஸ்தானுடனும் மத்திய ஆசிய அண்டை நாடுகளுடனும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த சீனா எதிர்பார்க்கலாமென  அவதானிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை,  'நாட்டில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும், ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தின் மையமாகத் திரும்புவதைத் தடுக்க வேண்டும்' என்று தலிபான்களையும் ஏனைய தரப்பினரையும் சீனா பல முறை கேட்டுள்ளதாக சௌத் சைனா மோர்னிங்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

சீனாவின் மிக முக்கியமானபிராந்தியமான மேற்கு சின்ஜியாங் ஆப்கானிஸ்தானுடன் 70 கி.மீ  எல்லையைக் கொண்டிருப்பது தெரிந்ததே.

சீனாவின் சமூக விஞ்ஞான அகடமியின் சீன-அமெரிக்க உறவுகள் குறித்த சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் லூ சியாங் குறிப்பிடுகையில், ஆப்கானிஸ்தானின் எல்லையில் 100 கி.மீ தூரத்திற்கு சீனா பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்நடவடிக்கை பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க உதவும்' என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் விடயத்தில் பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் மூலோபாய போட்டி நிலவினாலும் அந்நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைப்பை சீனாவினால் ஏற்படுத்த முடியும்.  அத்தோடு ரஷ்யாவும் சீனாவும் புலனாய்வு மற்றும் ஒருங்கிணைப்பிலும் இணைந்தும் செயற்படலாம்.

ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்டுள்ள எல்லா நாடுகளும் பயங்கரவாதத்தின் வளர்ப்பு நிலமாக ஆப்கான் மாறுவதை விரும்பவில்லை என்றும் சௌத் சைனா மோர்னிங்க் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

Wed, 08/25/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை