30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்

18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அதன் பிரகாரம் அடுத்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

Tue, 08/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை