கொரோனாவை ஒழிக்க இதுவரை 250 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால்

கொவிட்19 தொற்றிலிருந்து நாட்டையும் மக்களின் உயிர்களையும் பாதுகாத்துக்கொள்ள அரசாங்கம் பாரிய அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதுடன், இதுவரை 250 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பதிலயளிக்கையில்,

நாட்டு மக்களின் உயிர்மீது அக்கறை கொண்டு உயிர்களை பாதுகாக்கும் நோக்கமுடைய அரசாங்கமென்ற ரீதியில் கொவிட்19 தொற்றை கட்டுப்படுத்தும் பணியை முன்னெடுத்து வருகிறோம். எதிர்க்கட்சித் தலைவரும் தடுப்பூசியை பெற்றுக் -கொண்டுள்ளார். இதனை வரவேற்பதுடன், அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைக்கிறோம்.

பொது மக்களின் உயிர்கள் எமக்கு முக்கியம் என்பதால் பாரிய அளவிலான நிதியை எவ்வித எதிர்பார்ப்புமின்றி அரசாங்கம் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த செலவிட்டு வருகிறது.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தவும் இந்த விடயத்தை முறையாக கையாளவும் இதுவரை 250 பில்லியன்வரையான நிதி செலவிடப்பட்டுள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

Fri, 08/06/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை