காட்டுத் தீ: கலிபோர்னிய மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ பாதிப்பிலிருந்து தப்பிக்க மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் 14ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள காடுகளில் தீ பற்றியது. அதீத வெப்ப அலைகளின் காரணமாக ஏற்பட்ட இந்தத் தீ பாதிப்பானது குறுகிய காலத்திலேயே பெரும்பான்மையான இடங்களை நாசம் செய்தது. அம்மாநில வனத்துறை சார்பில் அளிக்கப்பட்ட தகவலின்படி  இதுவரை 2.78 இலட்சம் ஏக்கர் வனப்பகுதி காட்டுத் தீயால் எரிந்துள்ளது. இது மொத்த வனப்பகுதியில் 35 வீதம் ஆகும்.

சுமார் 64 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருவதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ அதிகரித்து வருவதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது.  கட்டுக்கடங்காமல் தீ பரவி வருவதைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் நிலவி வரும் வறண்ட வானிலை காரணமாக 13 மாகாணங்கள் தற்போது காட்டுத்தீ பாதிப்பை சந்துத்து வருகின்றன. காட்டுத்தீயை அணைக்க 20 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

Fri, 08/06/2021 - 15:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை