டெல்டா திரிபு 135 நாடுகளுக்குப் பரவியது

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகைக் கொரோனா திரிபு 135 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அல்பா வகை கொரோனா 182 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா இதுவரை 135 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் புதிதாக கொரோனா கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை ஒரு மாதத்துக்கும் மேலாக தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை மட்டும் 40 இலட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மத்தியதரை, மேற்கு பசிபிக் பிராந்திய நாடுகளில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சா்வதேச அளவில் அந்த எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. புதிய கொரோனா தொற்று கிழக்கு மத்தியதரைப் பிராந்தியத்தில் 37 வீமும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 33 வீதமும் அதிகரித்துள்ளது. தென்-கிழக்கு ஆசியப் பகுதிகளில் புதிய கொரோனா தொற்று 9 வீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Sat, 08/07/2021 - 14:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை