வீடுகளுக்கு செல்வோர், இடையில் சிவில் உடையிலுள்ள பொலிஸாரால் கைதுசெய்யப்படுவது ஆபத்தானது

ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு வீடுகளுக்கு செல்வோர், இடையில் சிவில் உடையிலிருக்கும் பொலிஸாரால் கைதுசெய்யப்படுவது ஆபத்தான முறையென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட பின்னர் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் கைது செய்யப்படுகின்றனர். அவ்வாறு கைது செய்யப்படுபவர்களை ஏன் துறைமுகத்திற்குள் உள்ள பொலிஸ் நிலையத்திற்குள் கொண்டு வருகின்றீர்கள். இது பிரச்சினைக்குரியதே. கைது செய்யப்படும் பொலிஸ் நிலையங்களிலேயே தடுத்து வைக்கப்பட வேண்டும். ஆனால் ஆர்ப்பாட்டங்கள் முடிந்து சென்ற ஆசிரியர்களை கைது செய்துள்ளீர்கள். இவர்கள் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் இல்லை. இது வேண்டுமென்றே கைது செய்ய முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Sat, 08/07/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை