நாட்டின் மரபுரிமையை அழிக்க எவருக்கும் இடமளிக்க மாட்டோம்

தேசிய தொல்பொருள் தின நிகழ்வில் பிரதமர் தெரிவிப்பு

எமது நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (07) தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற 131ஆவது தேசிய தொல்பொருள் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இத் தேசிய நிகழ்வில் சோமாவதிய மற்றும் ரிதி விகாரை ஆகியன தொல்பொருள் ஆராய்ச்சி மையமாக பெயரிடப்பட்டமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதியினால் சோமாவதிய ரஜ மஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கள தேரர் மற்றும் ரிதி விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய திப்படுவாவே புத்தரக்கித தேரர் ஆகியோருக்கு அதற்கான சன்னஸ பத்திரம் வழங்கப்பட்டது.

இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் www.archaeology.gov.lk புதிய இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க ஆகியோர் இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் புதிய 14 நூல்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

நான்கு தலைமுறைகளாக தொல்பொருள் திணைக்களத்திற்கு ஆற்றிய சேவைக்காக, சீகிரிய தல்கொடே அளுத்கெதர தலைமுறையினருக்கு பிரதமரினால் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதிய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு, புதுகல தொல்பொருள் தளத்திலிருந்து இரு களிமண் பலகைகளை கண்டுபிடித்த நிமல் கருணாதிலக மற்றும் இதுவரை அறியப்படாத பண்டைய குகை ஓவியங்களை கண்டுபிடித்த ஓ.ஆர்.ஜயதிலக மற்றும் திருமதி.தனூஜா தர்ஷனி அமரதுங்க ஆகியோருக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நினைவு சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், திருமதி.தர்ஷனி அமரதுங்கவினால் இரு ஓவியங்களும் வழங்கப்பட்டன.

சோமாவதிய ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய பஹமுனே சுமங்கள தேரர் மற்றும் ரிதி விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய திப்படுவாவே புத்தரக்கித தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

 

Thu, 07/08/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை