கொவிட்-19 தடுப்பு மருந்தைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் இஸ்ரேல், தென்கொரியா

இஸ்ரேலும் தென் கொரியாவும் தங்களுக்கு இடையே தடுப்பூசிகளைப் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.

இஸ்ரேலில், 700,000 Pfizer-BioNTech COVID-19 தடுப்பூசிகள் காலாவதியாகப் போகின்றன. அவை அனைத்தையும் தென்கொரியாவிடம் கொடுக்கவிருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் நஃப்டாலி பென்னெட் (Naftali Bennett) கூறினார்.

தடுப்புமருந்துகளை தென்கொரியாவிற்கு வழங்கும் நடவடிக்கை இந்த மாத இறுதியில் தொடங்கும்.

அதற்குப் பதிலாக, இஸ்ரேல் செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் அதே அளவு மருந்துகளைத் தென்கொரியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும்.

தென்கொரியா தன்வசம் இருந்த தடுப்பு மருந்துகளை விரைவாக மக்களிடையே விநியோகித்தது.

அது மேலும் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடத் திட்டமிடுகிறது. ஆனால் உலகளவில் தடுப்புமருந்துக்குத் தேவை அதிகமாக உள்ளது. அதனால், குறித்த நேரத்தில் தென்கொரியாவால் போதிய அளவு மருந்துகளைப் பெற முடியவில்லை.

தென் கொரியா நவம்பர் மாதத்துக்குள் அதன் மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினருக்கு ஒருமுறையாவது தடுப்பூசி போடத் திட்டமிடுகிறது. அந்த இலக்கை முன்கூட்டியே எட்ட விரும்புவதாக சோல் சென்ற வாரம் கூறியது.

Thu, 07/08/2021 - 12:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை