முதலீட்டு வாய்ப்பை மேம்படுத்த இணைந்த வேலைத்திட்டம்

நிதியமைச்சர் பசில் தலைமையில் விசேட பேச்சுவார்த்தை

 

தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் கவனம் செலுத்தி அந்தத் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை இனங்கண்டு மேம்படுத்துவதற்காக முறையான இணைந்த வேலைத் திட்டமொன்றை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வேலைத் திட்டம் தயாரிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை  நேற்று (28) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

தற்போது முதலீட்டு வாய்ப்பு அதிகமாக காணப்படும் கடற்றொழில் மற்றும் மருந்து தயாரிப்பு ஆகிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் அத்துடன் ஏனைய முக்கியத்தும் வாய்ந்த துறைகளிலும் முதலீட்டுக்கான வாய்ப்புகளை இனங்காணுதல் மற்றும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சுற்றுச்சூழலை உருவாக்குதல் ஆகியவை மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ளன.

அவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள துறைகள் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அறிவிப்பதற்கு முறையான பிரசார பொறிமுறையொன்றை தயாரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் தமக்கான சேவைகளை முறையாகப் பெற்றுக் கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களில் உள்ளக வேலைத்திட்டங்கள் தயாரித்து முதலீட்டாளர்களுக்கு வசதிகளை பெற்றுக் கொடுப்பதை இலகு படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேற்படி பேச்சுவார்த்தையில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நிதி யமைச்சின் செயலாளர் எஸ். ஆர் ஆட்டிகல உள்ளிட்ட அதிகாரிகளும் முதலீட்டு துறை சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 07/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை