கடினமான காலத்தையும் வெற்றி கொள்ள நாம் தயார்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவிப்பு

யுத்தம் நடைபெறும்போது கடினமான காலத்தையும் சிறந்த வேலைதிட்டங்களூடாக வெற்றிபெற முடிந்தது. அதேபோல கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள கடினமான காலத்தையும் திறம்பட வெற்றிகொள்ள நாம் தயாராகவுள்ளோம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

மாகாண சபைகளின் முன்னாள் பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நேற்று (11) ஒன்றுகூடல் ஒன்றை அலரிமாளிகையில் நடத்தினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ மேலும் கூறுகையில்,

நாடு தற்பொழுது பொருளாதார சவாலை எதிர்கொள்ளும் ஒரு காலத்தில் இருக்கின்றது. "சுங்கத்திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் வருமான வரித்துறை" மூலம் பெறப்படும் வருவாயை முக்கிய வருமான ஆதாரங்களாக இலங்கை கொண்டுள்ளது.கொவிட்19 காலத்தில் உலகின் ஒவ்வொரு நாடும் எதிர்கொள்ளும் ஒரு சவாலாக பொருளாதாரம் காணப்படுகிறது. இதை நாம் அச்சமின்றி எதிர்கொள்ள தயாராகவுள்ளோம்.

போரின்போது கூட நாடு பொருளாதாரத்தில் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டதுடன் அக்காலத்திலும் நிலையான வளர்ச்சியில் நிலைபெற முடிந்ததை நினைவுபடுத்துவதுடன் அந்தக் காலமே ஒப்பீட்டளவில் கடினமான காலமாக இருக்கிறதென்றும் தெரிவித்தார்.

கடினமான காலத்தை சிறந்த வேலைதிட்டங்களூடாக வெற்றிபெற முடிந்தது. அதே போல கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள கடினமான காலத்தையும் திறம்பட வெற்றிகொள்ள நாம் தயாராகவுள்ளோம் என தெரிவித்தார்.

Mon, 07/12/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை