இலங்கைக்கு 150 மில். டொலர் கடனுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியது

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது. வளரும் உறுப்பு நாடுகளுக்கு தடுப்பூசி தொடர்பான ஆதரவை வழங்க டிசம்பர் 2020 இல் தொடங்கப்பட்ட ஆசிய பசிபிக் தடுப்பூசி அணுகல் வசதியின் ஒரு பகுதியாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கவும், பாதித்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும் இந்த கடனுதவியை வழங்க  தீர்மானித்துள்ளதாக வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகவா தெரிவித்துள்ளார். குறித்த கடன் ஒப்பந்தத்தில் திறைசேரியின் செயலாளர் எஸ். ஆர். அட்டிகலே மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Mon, 07/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை