உய்கர் முஸ்லிம் ஆதரவு நிலையில் இருந்து உக்ரேய்ன் விலகல்

சீனாவுடன் புதிய முதலீட்டு உடன்பாடு

சீனாவின் உய்கர் முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து உக்ரேய்ன் வாபஸ் பெற்றதையடுத்து புதிய முதலீட்டுத் திட்டத்துக்கான உடன்பாட்டை சீனா அந்நாட்டுடன் மேற்கொண்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

உய்கர் முஸ்லிம்கள் பெருமளவில் வாழும் ஸின்ஜியாங் பிராந்தியத்துக்கு சர்வதேச சுதந்திர பார்வையாளர் குழுவுக்கு சீனா உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோள பத்திரத்தில் கையெழுத்திடுவது என்று உக்ரெய்ன் கடந்த மாதம் தீர்மானம் எடுத்திருந்தது. இத் தீர்மானத்தில் இருந்து உக்ரெய்ன் வாபஸ்பெற வேண்டும் என சீனா அழுத்தம் பிரயோகித்து வந்த நிலையிலேயே உக்ரெய்ன் இத் தீர்மானித்தை எடுத்துள்ளது.

இதேசமயம் சீன வர்த்தக அமைச்சு உக்ரெய்னுடனான உடன்படிக்கையின் கீழ் பாதை, பாலம், ரயில் துறை அபிவிருத்தி செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஸின்ஜியாங் பிராந்தியத்தில் வாழும் உய்கர் முஸ்லிம் சமூகத்தின் மீது மனித உரிமை துஷ்பிரயோகங்களில் சீன அரசு ஈடுபட்டிருப்பதாகவும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்கர் சமூகத்தினர் சித்திரவதை செய்யப்படுவதாகவும், பலவந்தமாக தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும், பசிப்பிணியால் வாடுவதாகவும் தெரிவிக்கப்படுவதையடுத்தே நிலைமைகளை நேரில் அவதானிப்பதற்காக பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

Fri, 07/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை