விதிமுறைகளை மீறி திருமண வைபவம்

20 பேர் தனிமைப்படுத்தலில்!

பாணந்துறை- பல்லேமுல்ல பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வொன்றை நடத்திய 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இவர்களில் 12 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி திருமண நிகழ்வொன்று இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Thu, 07/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை