டெல்டா திரிபுக்கு எதிராக செயற்படும் மொடர்னா

ஆய்வுகள் ஊடாக நிரூபணம் என அறிவிப்பு

 

அமெரிக்காவின் கொவிட் 19 தடுப்பூசியான மொடர்னா, இந்தியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா கொரோனா திரிபுக்கு எதிராக வினைத்திறனுடன் செயற்படுவதாக தெரிய வந்துள்ளது. புதிய ஆய்வுகள் ஊடாக இந்த விடயம் தெரியவந்திருப்பதாக மொடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்டா திரிபுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்புடலை இந்த தடுப்பூசி பிறப்பிப்பதாக அந்நாட்டு சுகாதார துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட பீட்டா (Beta) திரிபுக்கு எதிராக மொடர்னா வினைத்திறன் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Thu, 07/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை