காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படமாட்டாது

காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படமாட்டாது-US Embassy in Kabul Will Not Closed

ஓகஸ்ட் இறுதி வரை அமெரிக்கா தனது இராணுவத்தை வெளியேற்றும் செயற்பாடு தொடர இருக்கும் நிலையில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளதால் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் திறந்திருக்கும், ஜனாதிபதி பைடன் பணிப்புரைப்படி, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனும் மக்களுடனும் நாங்கள் செய்யும் பணிகளை தொடர்வதற்கு காபூலில் ஒரு வலுவான இராஜதந்திர இருப்பை நாங்கள் தொடர்ந்து வைத்திருப்போம். எங்களிடம் தூதரகத்தை மூம் திட்டம் கிடையாது "என்று தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

நாட்டில் மோசமான பாதுகாப்பு நிலைமை காரணமாக காபூலில் உள்ள தூதரகத்தை அவசரமாக மூடுவதற்கான திட்டத்தை அமெரிக்க அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டிருந்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க துருப்புகளை திரும்பப் பெறுவதன் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது,

ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்துள்ள நிலையில் பைடன் நிர்வாகம் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முடிவை அறிவித்தது. தலிபான் மற்றும் ஆப்கானிய படைகளுக்கிடையில் அதிகரித்து வரும் மோதல்களினால் நாடு உள்நாட்டுப் போருக்குச் செல்லும் என்ற அச்சத்தைத் தூண்டுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

"எங்கள் மக்களுக்கு மற்றும் திட்டங்களுக்கு ஏற்படும் அபாயங்களை எவ்வாறு குறைப்பது என்று அமெரிக்க தூதரகம் தொடர்ந்து திட்டமிட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்படுவதற்கான பாதுகாப்பு சவால்களை நாங்கள் அறிவோம், மேலும் இந்த சவால்களை எதிர்கொள்ள தேவையான முன்னெடுப்புகளை நாங்கள் மேற்கொள்வோம்" என்று தூதரகம் மேலும் கூறியுள்ளது.

பைடன் மற்றும் செயலாளர் பிளிங்கனின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திள்ள தூதரகம், "ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ இருப்பு முடிவுக்கு வருகிறது, அமெரிக்க தூதரகம் ஆப்கானிஸ்தானில் எங்கள் இராஜதந்திர, மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு உதவி திட்டங்களை தொடரும்" என்று தெரிவித்துள்ளது,

ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களின் மத்தியில், நடந்துகொண்டிருக்கும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது, இது பெரும்பாலும் தலிபான்களால் தான் மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் மற்றும் இராணுவத்துடன் தொடர்பற்ற தொழிலாளர்கள் எந்தவொரு பிரச்சினையையும் பாதுகாப்பு அபாயங்களையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என்று இந்த வார தொடக்கத்தில், தலிபான்கள் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Sun, 07/11/2021 - 12:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை