ஒரே நாளில் அதிகூடிய டோஸ்கள்; 2 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் வந்தடைந்தன

ஒரே நாளில் அதிகூடிய டோஸ்கள்; 2 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் வந்தடைந்தன-2 million Sinopharm COVID19 Vaccine Arrived in Sri Lanka

- இதுவரை 7.1 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன 

இன்று (11) அதிகாலை Sinopharm தடுப்பூசிகளின் 20 இலட்சம் டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

அந்த வகையில் ஒரே நாளில் இலங்கையை வந்தடைந்த கொவிட்-19 தடுப்பூசி டோஸ் தொகை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் அதிகூடிய டோஸ்கள்; 2 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் வந்தடைந்தன-2 million Sinopharm COVID19 Vaccine Arrived in Sri Lanka

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL 869 எனும் விமானம் 10 இலட்சம் Sinopharm தடுப்பூசி டோஸ்களுடன் இன்று அதிகாலை 5.10 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்நது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது தொகுதியான மற்றுமொரு 10 இலட்சம் Sinopharm டோஸ் தடுப்பூசிகளுடன் இரண்டாவது ஶ்ரீ லங்கம் விமான சேவை விமானம் அதிகாலை 6.40 மணிக்கு இலங்கையை வந்தடைந்தது.

ஒரே நாளில் அதிகூடிய டோஸ்கள்; 2 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் வந்தடைந்தன-2 million Sinopharm COVID19 Vaccine Arrived in Sri Lanka

அந்த வகையில், இன்று பெறப்பட்ட தடுப்பூசிகள், தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாட்டில் முதல் டோஸ் பெறாதவர்களுக்கு வழங்கப்படுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இதுவரை சீனாவிலிருந்து 7.1 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

அதற்கமைய,
இலவசமாக கிடைத்தவை

  • மார்ச் 31 - 600,000
  • மே 25 - 500,000

கொள்வனவு செய்யப்பட்டவை

  • ஜூன் 06 - ஒரு மில்லியன்
  • ஜூன் 09 - ஒரு மில்லியன்
  • ஜூலை 02 - ஒரு மில்லியன்
  • ஜூலை 04 - ஒரு மில்லியன்
  • ஜூலை 11 - 2 மில்லியன்
Sun, 07/11/2021 - 10:46

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை