வுஹானுக்கு பின் சீனாவில் மோசமான நோய்த் தொற்று

சீனாவின் நன்ஜிங் நகரில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது பீஜிங் மற்றும் ஐந்து மாகாணங்களுக்கு பரவியுள்ளது. முதல்முறை வுஹான் நகரில் ஏற்பட்ட தொற்றுச் சம்பவத்திற்கு பின்னர் இது தீவிமான நிலையை ஏற்படுத்தி இருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜூலை 20 ஆம் திகதி நகரின் பரபரப்பான விமானநிலையத்தில் நோய்த் தொற்று முதல்முறை அடையாளம் காணப்பட்டது தொடக்கம் இதுவரை 200 பேர் வரை தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

நன்ஜிங் விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் நகரில் பரந்த அளவில் சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.

நகரில் வாழும் 9.3 மில்லியன் மக்கள் மற்றும் அங்கு பயணித்தவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்படும் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபே தற்போதைய நோய்ப்பரவலுக்கு காரணம் என்று சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர்.

Sat, 07/31/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை