வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானம்

உயர் கல்வி நிமித்தம் வெளிநாடு செல்வதற்காக கொரோனா ஒழிப்பு செயலணியில் பதிவு செய்த மாணவர்களுக்கு நாட்டிற்கு கிடைத்த பைஸர் தடுப்பூசிகளை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

இராணுவ வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசிகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை மாத்திரம் செலுத்தியிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.   

Sat, 07/10/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை