சீரற்ற வானிலை; நான்கரை இலட்சம் பேருக்கு மின்சாரம் இல்லை

சீரற்ற வானிலை; நான்கரை இலட்சம் பேருக்கு மின்சாரம் இல்லை-No Electricity for More than 475000 Person

சுமார் 475,000 மின் இணைப்புகளைக் கொண்டுள்ள வீடுகள் மின்சாரமின்றி பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு (09) ஏற்பட்ட மழை மற்றும் காற்று காரணமான சீரற்ற வானிலை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இது வரை மின் துண்டிப்புக்கள் தொடர்பில் 12,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், நிலைமையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

காலி, மாத்தறை, கிரிபத்கொடை, கண்டி, பெராதெனிய, குளியாப்பிட்டி, குருணாகல், களனி, இரத்மலாலை, சிலாபம் ஆகிய இடங்களில் இவ்வாறு மின்சாரத் தடை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக அனர்த்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரங்கள் வீழ்வு, மண்மேடு சரிவு போன்ற காரணங்களால்  சில பாதைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, வீடுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

Sat, 07/10/2021 - 12:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை