அந்நிய செலாவணி குறித்த ரணிலின் கருத்துக்கு மறுப்பு

அடிப்படையற்றது என்கிறார் அஜித் கப்ரால்

நாட்டின் அந்நிய செலாவணிதுறை குறித்து முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க கூறும் கருத்துக்கள் அடிப்படையற்றவை.

பொருளாதார நிலைமையினை சீர் செய்வதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய தேவை கிடையாது என நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.இலங்கை பெற்றுக் கொண்டுள்ள அரச முறை கடன்களை மீள செலுத்துவதில் எவ்வித நெருக்கடி நிலைமையும் ஏற்படாது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து அரச முறை கடன்களை உரிய காலத்தில் திருப்பி செலுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய கடன்களை முறையாக செலுத்துவதற்கு உரிய திட்டங்கள் அனைத்து துறைகளையும் அடிப்படையாக கொண்டு வகுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தேசிய பொருளாதார நிலைமை மற்றும் அந்நிய செலவாணி துறை குறித்து முன்னாள் பிரதமர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடும் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை.

சுற்றுலா பிரயாணிகளின் வருகை, வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல், ஏற்றுமதி நிலைமைகள் ஆகிய காரணிகள் அந்நிய செலவாணி துறையில் பிரதான பங்கு வகிக்கின்றன என்றார்.

Fri, 07/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை