சவால்களை வெற்றிகொள்ள அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும்

சுபீட்சத்தின் நோக்கு இலக்கை அடைவதில் உறுதி

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் என்பதுடன் சுபீட்சத்தின் நோக்கு என்ற எமது இலக்கை அடைவதில் உறுதியாக செயல்படுவோமென நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சராக பஸில் ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதை தொடர்ந்து நாட்டின் முக்கிய தரப்பினர் மற்றும் பன்நாட்டு இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்புகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுடனும் அவர் விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

யுத்தத்திற்கு முகங்கொடுத்து பொருளாதாரத்தை வலுப்படுத்திய நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிலிருந்தும் நாட்டை மீட்டெடுப்பாரென முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் கூறியுள்ளதுடன், அரசாங்கத்தின் கொவிட்19 ஒழிப்பு மற்றும் நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முழுமையாக ஒத்துழைப்புகளை வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ,

அரசாங்கத்தின் இலக்கான சுபீட்சத்தின் நோக்கை அடைந்துக்கொள்ள அனைத்து பொறுப்புகளும் நிறைவேற்றப்படும். கட்சி சார்பாக பணிகளை முன்னெடுக்காது அனைவருக்கும் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

மக்களுக்காக தியாகம் செய்ய ஒருபோதும் நான் தயங்கமாட்டேன். கடந்த காலங்களில் செய்ததைப் போலவே தாய்நாட்டிற்கும் மக்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன். அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 07/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை