ஐரோப்பாவில் 'கொரோனா' 50 மில்லியனைத் தாண்டியது

ஐரோப்பிய வட்டாரத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 மில்லியனைத் தாண்டியுள்ளது.

ஒரு கண்டத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்–19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை. வேகமாகப் பரவக்கூடிய தன்மை கொண்ட டெல்டா வகைக் கொரோனா வைரஸ் அங்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

டெல்டா வைரஸ் இப்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. ஐரோப்பாவில் சுமார் 8 நாளுக்கு ஒருமுறை 1 மில்லியன் பேருக்குப் புதிதாக நோய்த்தொற்று ஏற்படுகிறது.

ஐரோப்பிய வட்டாரத்தில் நோய்த்தொற்றால் 1.3 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 27 வீதத்தினர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்.

நோய்த்தொற்றால் உலக அளவில் உயிரிழந்தவர்களில் 31 வீதத்தினர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்.

நோய்த்தொற்றால் மிக மோசமாக பாதிக்கபட்ட ஐரோப்பிய நாடாக ரஷ்யா உள்ளது. அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 மில்லியனை எட்டவுள்ளது.

 

Wed, 07/21/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை