ஆசிரியர்களுக்கான தடுப்பூசி வழங்கல் இன்று முதல் ஆரம்பம்

கண்டியில் பிரதான வைபவம் என்கிறார் திலும்

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயல்முறை நாளை கண்டி மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கணிசமான சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.  கண்டி மாவட்டத்தில் ககவெட கோரளை பிரதேச சபை பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திங்கட்கிழமை (12) முதல் ரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வி தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்த கலந்துரையாடல் மற்றும் எதிர்கால பணிகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் நேற்று கண்டி மாவட்ட செயலகத்தில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நடைபெற்றது. இதன்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட விடயத்தினை குறிப்பிட்டார்.

Mon, 07/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை