கென்யாவில் எண்ணெய் லொறி வெடித்ததில் 13 பேர் உயிரிழப்பு

மேற்கு கென்யாவில் எண்ணெய் லொறி ஒன்று கவிழ்ந்து தீப்பற்றிய சம்பவத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிசுமு மற்றும் பசியா நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு இந்த ட்ரக் வண்டி மற்றொ வாகனத்துடன் மோதியுள்ளது. விபத்து இடம்பெற்ற பகுதி தீப்பற்றக் கூடியதாக இருந்தது என்று பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் லொறி வெடிப்பதற்கு முன்னர் அங்கு கசியும் எண்ணெய்யை எடுப்பதற்கு மக்கள் கேன்களை எடுத்துக்கொண்டு முண்டியடித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மோசமான தீக்காயங்களுடன் 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் பொலிஸ் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் சிறுவர்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த கிழக்கு ஆபிரிக்க நாட்டில் வீதி விபத்துகள் வாழக்கமான ஒன்றாக காணப்படுகிறது.

ஒற்றைப் பாதை உள்ள நெடுஞ்சாலைகளிலும் லொறி மற்றும் ஏனைய வாகனங்கள் இரவு நேரத்தில் கூட அதிக வேகமாக பயணிப்பது வழக்கமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கென்யாவில் வீதி விபத்துகளில் சுமார் 3,000 பேர் உயிரிழக்கின்றனர்.

Tue, 07/20/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை