ரிசாத் பதியுதீனின் கைதுக்கு எதிராக ரணில் சபையில் உரை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பீ ஹரீன் பெர்ணாந்துவை கைது செய்யும் முயற்சி தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பிய அவர் பாராளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் சிறப்புரிமை குறித்து தான் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகி விளக்கமளித்துள்ளதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது எம்.பியினதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமையை மீறும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

ரிஷாத் பதியுதீன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம் இன்றுவரை தெரிவிக்கப்படவில்லை.

அதற்கான காரணத்தை அறிய பாராளுமன்றத்திற்கு உரிமை இருக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எந்த பிரிவை அவர் மீறியதற்காக கைதானார் என்பது தெளிவில்லை.

பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கப்பால் சென்று பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியாது. பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களையும் பாதுகாக்க வேண்டும்.

பொதுமக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பு மற்றும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றார்.இதற்கு அமைச்சர் சரத் வீரசேகர பதில் வழங்கினார். (பா)

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

 

 


ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்
Tue, 07/20/2021 - 08:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை