ஜனாதிபதி–TNA சந்திப்பு: திகதி விரைவில் அறிவிக்கப்படும்

ஜனாதிபதி கடிதம் மூலம் அறிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு வெகுவிரைவில் திகதியை அறிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றுமுன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் மூலம் அந்த தகவலை அனுப்பியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஏற்கனவே ஏற்பாடு செய்த சந்திப்பு பிற்போடப்பட்டமையினால் அசௌகரியம் ஏற்பட்டிருக்குமானால் அதற்காக தாம் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் சந்திப்புக்கான திகதியை வெகு விரைவில் அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 06/25/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை