தெஹிவளை ZOOவில் மற்றுமொரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய தோர் என்ற பெயருடைய சிங்கத்தின் அருகிலிருந்த மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இதனை உறுதிசெய்துள்ளார்.

இந்த நிலைமைக்கு மத்தியில், தொற்றுக்கு இலக்காகிய சிங்கத்திற்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 06/25/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை