சைனோபாம் தடுப்பூசி வழங்கல் விபரம் இனி SMS சேவையில்

கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் பரீட்சார்த்தம்

சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்குவதற்காக கொழும்பு நகர சபையின் எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு பொது விபரங்களை குறுஞ் செய்தி மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கொழும்பு மாநகர சபை தொற்று நோய் தொடர்பான வைத்தியர் தினுகா குருகே உறுதிப்படுத்தியுள்ளார்.

சைனோபாம் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கை நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்போது கொழும்பு நகர சபையின் எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு தடுப்பூசியின் டோஸை பெற்றுக் கொள்ள வரும் திகதி, இடம் மற்றும் நேரம் குறித்து குறுஞ் செய்தியூடாக அறிவிக்கப்படும்.

நாட்டில் சைனோபாம் தடுப்பூசியின் முதல் டோஸ் இதுவரை 953,480 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Mon, 06/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை