பாடசாலைகள் திறப்பது குறித்து தவறான தகவல்

ஜூன் 29 திறப்பதில் உண்மையில்லை

பாடசாலைகள் மீண்டும் ஜூன் 29ஆம் திகதி முதல் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மைத்தன்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில்,...

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. சுகாதார பிரிவின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படும் பரிந்துரையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

Mon, 06/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை