பயணத்தடையை மேலுமொரு வாரத்திற்கு நீடிக்க ஆலோசனை

சுகாதாரத்துறை அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடுமுழுவதும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்குமாறு சுகாதாரத் துறையினர் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

அவ்வாறு இல்லாவிட்டால் பயணத்தடையை நடைமுறைப்படுத்தி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகளில் எந்தவித பிரதிபலனும் இல்லாமல் போகலாம் என்றும் சுகாதாரத்துறையினர் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டில் தற்போது தினமும் 3,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் தினமும் புதிதாக இனங்காணப்படுவது மோசமான நிலைமையாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத்துறையினர், பயணத்தடையை முறையான விதத்தில் தொடர்ந்தும் ஒரு வாரத்துக்கு நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதேவேளை இலங்கை மருத்துவர் சங்கம் அதனை வலியுறுத்தி மூன்று பக்க கடிதம் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சில தினங்களுக்கு முன் அனுப்பியுள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் கடந்த 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பயணத் தடையை நடைமுறைப்படுத்தியது. அதனை மீண்டும் மே 25ஆம் திகதி அதிகாலை தளர்த்தி அன்றைய தினமே இரவு 11 மணிக்கு மீண்டும் பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதற்கிணங்க இன்று ஏழாம் திகதி பயணத் தடை நீக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சுகாதாரத்துறையினரின்அறிவுறுத்தல்களுக் கிணங்க பயணத்தடை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டு அது எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய நிலையிலேயே மேலும் ஒரு வாரத்திற்கு பயணத் தடையை நீடிக்குமாறு சுகாதாரத் துறையினர் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 06/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை