நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள்

கொரோனாத் தடுப்பூசிகள் நாடளாவிய ரீதியில் போடப்பட்டு வரும் நிலையில்,கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்த தடுப்பூசி, மக்களுக்கு ஏற்றப்பட்டு வருகின்றது.

கொழும்பில் ஜிந்துப்பிட்டி வைத்தியசாலையில் கடந்த ஒருவாரகாலமாக இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டு வந்ததால் இப்பகுதியில் இதுவரை,950 பேருக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரி ஹேரத் தெரிவித்தார்.இதற்கிணங்க,கொழும்புநகரசுத்திகரிப்புத்தொழிலாளர்கள்சுமார்650 பேருக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.சுகாதாரமருத்துவஅதிகாரிடொக்கடர்பத்தும்கொடிகாரதலைமையில்,நேற்று

இந்தத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா பரவலை முற்றாகத் தடுக்கும் நோக்கில் இத்திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.நகருக்கு வருவோரையும் மட்டுப்படுத்தி கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(ஏ.எஸ்.எம்.ஜாவித் )

Mon, 06/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை