நாட்டு மக்களின் பக்கம் நின்று சரியான தீர்மானங்களை எடுங்கள்

அரசாங்கத்துக்கு பேராயர் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்து

நாட்டை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அதிகாரத்துக்கு வந்தவர்கள் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதை கவலையுடன் தெரிவிப்பதாக கூறிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை; செல்வந்தர்கள், அதிகாரம் கொண்டவர்கள் அல்லது வேறு நாடுகளுக்கு முன்னுரிமை

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன் வழங்காது நாட்டு மக்களின் நலன் கருதியே அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த அனைத்து எதிர்பார்ப்புகளும் சுக்கு நூறாகி போயுள்ளதுடன் நாட்டில் நம்பிக்கையற்ற சூழல் உருவாகியுள்ளதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.

‘நல்லாட்சி’, ‘சுபீட்சத்தின் நோக்கு’ என எத்தகைய தொனிப் பொருளை வைத்து அதிகாரத்திற்கு வந்தாலும் இந்த அரசாங்கமும் காட்டிக்கொடுத்தலை மட்டுமே மேற்கொண்டுள்ளதென தெரிவித்துள்ள பேராயர், இப்போதாவது அத்தகைய பயணத்தை நிறுத்த வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை கவலையளிக்கிறதென தெரிவித்துள்ள பேராயர், நாடு எத்தகைய பாதையில் பயணிக்கின்றதென கேள்வி யெழுப்பியதுடன் தீர்மானங்களை எடுப்பது மற்றும் நாட்டை ஆட்சி செய்வது யார்? என்ற சிக்கல் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளங்களை விற்பது சுலபமானது எனினும் நாட்டின் முன்னேற்றம் என்பது வளங்களை விற்பதல்லவென சுட்டிக்காட்டியுள்ள பேராயர், இத்தகைய சூழ்நிலையில் நாட்டின் வளங்களை வேறு நாடுகளுக்கு காணிக்கையாக்க வேண்டாமென தாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மிலேனியம் சேலஞ்ச் கோபரேஷன் உடன்படிக்கையை அன்று கடுமையாக எதிர்த்த தரப்பினர் தற்போது ஆட்சிக்கு வந்து அதைவிட மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ள பேராயர், சர்வாதிகாரத்திற்கோ அல்லது பொய்களைக் கூறி கேம் ஆடும் வாதத்திற்கு இடமளிக்க முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் செல்வந்தர்கள், அதிகாரம் கொண்டவர்கள் அல்லது வேறு நாடுகளை வைத்து அன்றி நாட்டு மக்களின் நலன் கருதியே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். (ஸ)

Thu, 06/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை