விவசாயிகளின் அறுவடைகளை அவர்களது இடங்களிலேயே கொள்வனவு செய்ய திட்டம்

கமத்தொழில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை

கொரோனா தொற்று நிலைமை மற்றும் பயணத் தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மரக்கறி விவசாயிகளின் அறுவடைகளை அவர்களின் விளை நிலங்களுக்கு சென்று கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொள்வனவு செய்யப்படும் காய்கறிகளை பொதுமக்களுக்கு இலவசமாகவேனும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாடு முழுவதிலுமுள்ள காய்கறி விவசாயிகள் தமது அறுவடைகளை விற்பனை செய்ய முடியாத நிலைமையை எதிர்நோக்கி வருகின்றனர். இதன் காரணமாக ஏனைய பிரதேசங்களில் காய்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. பல காய்கறிகளின் சில்லறை விலை 250  ரூபாவுக்கும் மேல் அதிகரித்துள்ளதுடன் சில பிரதேசங்களில் கொள்வனவு செய்ய காய்கறிகள் இல்லாத நிலைமையும் காணப்படுகிறது.

இந் நிலையில் மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடியுள்ள ஜனாதிபதி, விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை மற்றும் பழங்களை கொள்வனவு செய்து விநியோகிக்கும் பொறிமுறையை உருவாக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

 

Sat, 06/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை