அமெரிக்காவுக்கு துருக்கி எச்சரிக்கை

தமது நாட்டை ஓரங்கட்ட முயன்றால் அமெரிக்கா தமது முக்கிய கூட்டாளி ஒன்றை இழந்துவிடும் என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை அவர் முதல் முறை சந்திக்கவிருக்கும் நிலையிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இரு நேட்டோ நட்பு நாடுகளான துருக்கி மற்றும் அமெரிக்கா இடையே அண்மைக் காலத்தில் முறுகல் இருந்து வருகிறது. குறிப்பாக பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற விரைவில், முதலாம் உலகப் போர் காலத்தில் உஸ்மானிய பேரரசு மூலம் ஆர்மேனியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக அங்கீகரித்தது துருக்கியின் கோபத்தை தூண்டியது. இந்நிலையில் எர்துவான் மற்றும் பைடன் இருவரும் வரும் ஜூன் 14 ஆம் திகதி பிரசல்சில் நடைபெறும் நேட்டோ மாநாட்டின்போது சந்திக்கவுள்ளனர்.

Sat, 06/05/2021 - 07:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை