விவசாயிகளிடம் கொள்வனவு செய்து இலவசமாக வழங்க திட்டம்

நாட்டில் நடைமுறையிலுள்ள பயணத் தடை காரணமாக பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வரும் விவசாயிகளிடமிருந்து உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கமைய மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமை ச்சர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் பொருட்களை பொதுமக்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரத் துறையினர் மற்றும் பாதுகாப்புத்துறை ஊழியர்களுக்கும் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மரக்கறிகள் பழ வகைகள் குறிப்பாக வாழை, பப்பாசி, மரவள்ளி போன்ற பயிர்ச் செய்கைகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவற்றை கொள்வனவு செய்வதற்கு இக்காலங்களில் காணப்படும் அசௌகரியத்தினை கவனத்திற்கொண்டு மேற்படி நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 06/05/2021 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை