நோய் பாதித்த ஆய்வாளர்களை வெளியிட சீனாவிடம் கோரிக்கை

சீனாவின் வூஹானிலுள்ள நச்சுயிரியல் ஆய்வகத்தில் பணிபுரிந்தபோது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஆய்வாளர்களின் விபரங்களை வெளியிடுமாறு அமெரிக்க முன்னணித் தொற்றுநோய் நிபுணர் அன்டனி பௌச்சி கேட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டில், கொவிட்–19 நோய்த்தொற்று ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன், சீனாவின் வூஹான் மாகாணத்தில் உள்ள தொற்றுநோய் ஆய்வகத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் சிலர் நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவ்வாறு அவர்கள் நோய்வாய்ப்பட்டது உண்மையா என்றும், அப்படி அது உண்மையாக இருந்தால் எதனால் அவர்கள் நோய்வாய்ப்பட்டனர் என்றும் பௌச்சி வினவியுள்ளார். ஆய்வகத்திலேயே அந்த ஆய்வாளர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்றியதாக, ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். அதுகுறித்த தகவல்களை அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.

இருப்பினும், சீனா, வூஹான் ஆய்வகத்திலிருந்து கொவிட்–19 பரவல் முதலில் தொடங்கியதாகக் கூறப்படுவதை மறுத்து வருகிறது.

Sat, 06/05/2021 - 10:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை