ஜனனம் அறக்கட்டளையின் சமுக நலத்திட்டங்கள்

கொழும்பில் கலாநிதி வி.ஜனகனின் ஜனனம் அறக்கட்டளையின் சமுக நலத்திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

கொரோனா பயணக்கட்டுப்பாடு முடக்க நிலை காரணமாக கொழும்பு வாழ் மக்கள் சொல்லொன்னாத் துயரங்களை அனுபவித்து வரும் நிலையை கருத்திற்கொண்டு கலாநிதி ஜனகன், சமுக நலத்திட்டங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளார். மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள இந்நிலையில் அவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களை உடன் வழங்குமாறு ஜனனம் அறக்கட்டளைக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து வீதியோர தூய்மை பணியாளர்களுக்கும், வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கும் சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

வறுமைக்கோட்டின்கீழ் வாழும் அவிசாவளை, கொழும்பு - உருகொடவத்தை, கிருலப்பனை, அழுத்மாவத்த, திம்பிரிகஸ்யாய, மயில்வாகன பிரதேசம் மற்றும் பம்பலபிட்டி பிரதேச மக்கள் உட்பட பல பிரதேசங்களில் கலாநிதி வி.ஜனகனின் ஜனனம் அறக்கட்டளையினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

Tue, 06/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை