ஒரே டோஸ் போடக்கூடிய ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி!

ரஷ்யாவின் தயாரிப்பு விரைவில் மக்களுக்கு

கொரோனா தடுப்புக்காக ஒரு டோஸ் மட்டும் போடக்கூடிய தடுப்பூசியை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எந்த நிறுவனத்தின் தடுப்பூசியாக இருந்தாலும் குறைந்தது இரண்டு டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரே டோஸ் மட்டும் போடக்கூடிய ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.

விரைவில் இந்த தடுப்பூசி ரஷ்ய மக்களுக்கு செலுத்தப்படுமென ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகயில் முரஷ்கோ தெரிவித்துள்ளார்.இம்மாத இறுதிக்குள் 25 இலட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு தயாராக இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு தன்மையை வலுப்படுத்த விரும்புவோர் போன்றவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுமென அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவில் பரவத் தொடங்கிய டெல்டா கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வங்கதேசம் உட்பட பல்வேறு நாடுகளில் டெல்டா கொரோனாவுக்கு பயந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்கள் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென ரஷ்ய அதிகாரிகள் ஊக்குவித்து வருகின்றனர்.

 

Tue, 06/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை