சித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்புக்கு பரிந்துரைக்க கோரிக்கை

உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பு, தமிழக முதல்வருக்கு கடிதம்

சித்த மருத்துவத்தை உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆயுஷ் கவுன்சில் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் கடிதம் எழுதியுள்ளதாக அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் பாரம்பரிய மருத்துவமான சித்த, ஆயுர்வேத மருத்துவ வகைகள் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் அரசு மருத்துவமனை கொவிட் சென்டர்கள் போன்றவைகளில் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பெரிதும் இம்மருத்துவம் பங்காற்றியது. சித்த, ஆயுர்வேத உலக மக்கள் பயன்பெறும் வகையில் உலக சுகாதார அமைப்பிற்கு தமிழக அரசு, அரசு மருத்துவமனை கொவிட் கேர் சென்டர்களில் நோய்த்தொற்று ஏற்பட்டு குணமாகி சென்றவர்களை எண்ணிக்கையை கிளினிக்கல் trial கருதி ICMR மற்றும் உலக சுகாதார அமைப்பிற்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கையை சமர்ப்பித்து, அதன்மூலம் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற வேண்டும் என ஆயுஷ் கவுன்சில் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பும் கேட்டுக் கொள்கிறது என அவ் அமைப்பின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 40 சித்த ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி, நேச்சுரோபதி கல்லூரிகளில் பயிலும் மருத்துவர்களின் வாழ்வாதாரம் உயரும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம் என முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் செல்வகுமார் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tue, 06/15/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை