நீதிமன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை

நாட்டின் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் நீதிமன்றங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் விசேட சுற்றறிக்கையொன்று நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கையொப்பமிட்டு மேற்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையை கவனத்திற்கொண்டு சுகாதார பாதுகாப்பு வழிகாட்டலுக்கமைவாக நீதிமன்ற செயற்பாடுகளைமுன்னெடுத்துச் செல்வது தொடர்பில் மேற்படி சுற்றறிக்கையில் விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் பொருத்தமான வகையில் நடைமுறைப் படுத்த வேண்டிய ஆலோசனைகளை உள்ளடக்கி மேற்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Mon, 06/28/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை