அமெரிக்க மற்றும் பஹ்ரைன் தலைவர்களுடன் இஸ்ரேல் இராஜதந்திர பேச்சு

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் யெய்ர் லப்பிட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இத்தாலி தலைநகர் ரோமில் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பதவியேற்ற இஸ்ரேலின் புதிய அரசாங்கத்தின் சார்பான முதலாவது நேருக்கு நேர் இராஜதந்திர பேச்சுவார்த்தை இது என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் தலையீட்டுடன் பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் கடந்த ஆண்டு இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்கியது.

இந்நிலையில் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் யெய்ர் லப்பிட் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mon, 06/28/2021 - 16:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை