அமைச்சர் வாசு ஆஸ்பத்திரியில்!

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாரடைப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, “ஸ்டென்ட்” அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலை தற்காலிகமாக ஏற்பட்ட விடயம் அல்லவெனவும், மருத்துவ ஆலோசனைக்கமைவாக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வென்றும் அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

 

Sat, 06/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை