சுகாதார பிரிவினரால் ஊசி ஏற்றப்படவில்லை

வடக்கு ஆடைத் தொழிற்சாலைகளுக்கு சுகாதாரப் பிரிவினருக்கூடாக தடுப்பூசிகள் ஏற்றப்படவில்லையென வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கு வியாழக்கிழமை (24) தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. கிளிநொச்சியில் தடுப்பூசி ஏற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட  ஒவ்வாமை காரணமாக 25 பேருக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது தொடர்பில் அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்குத் தடுப்பூசிகள் எம்மூடாக ஏற்றப்படவில்லை. அவை நேரடியாக இராணுவத்தினர் ஊடாக ஏற்றப்படதாக அறிகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Sat, 06/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை