பாகிஸ்தான், பெரு ஆகிய நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கவிருப்பதாக அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு முதல்கட்டமாக 15 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க இருப்பதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும் வகையில் தங்கள் வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அடுத்த 6 மாதங்களுக்குள் தடுப்பூசி மற்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் இது பற்றி பேசியபோது, ரஷ்யாவும், சீனாவும் தங்களது தடுப்பூசிகளால் உலக நாடுகளிடம் செல்வாக்கு செலுத்த முயல்வதாக குற்றம் சாட்டினார். அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பிற்கு சீனா வரவேற்பு தெரிவித்தது.

அதே சமயம் ரஷ்யா மற்றும் சீனாவின் தடுப்பூசிகள் குறித்த ஜோ பைடனின் கருத்து வெறுக்கத்தக்கது என்றும் சீனா தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, அதிபர் ஜோ பைடன் அறிவித்தபடி பெரு நாட்டிற்கு 20 இலட்சம் ‘பைசர்’ தடுப்பூசிகளும், பாகிஸ்தானுக்கு 15 இலட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். அதன்படி பாகிஸ்தானுக்கு முதல்கட்டமாக இந்த வார இறுதிக்குள் 10 இலட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Wed, 06/30/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை