அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடகடல் நிறுவன செயற்பாடுகள் தொடர்பில் நேற்று மீளாய்வு

நோத் சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று நடைபெற்றது.

மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்க மற்றும் வடகடல் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது, வடகடல் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு கொவிட்19 தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி வினைத் திறனான செயற்பாடுகளை அதிகரித்தல் உட்பட்ட விடயங்கள் தெடர்பாக ஆராயப்பட்டன.

இதேவேளை கடற்றொழில் அமைச்சிற்காக இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் திட்டப் பணிப்பாளர் உட்பட்ட அமைச்சின் அதிகாரிகளுடனான குறித்த கலந்துலையாடலில், இவ்வாண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளையும் கடற்றொழில் அமைச்சர், அதிகாரிகளுக்கு வழங்கினார்.

Wed, 06/30/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை